அந்நிய பாஷைகளின் பேரில் விவாதம் (DEBATE ON TONGUES) ஞாயிற்றுக்கிழமை காலை, ஆகஸ்டு 7, 1960 யாக்கிமா, வாஷிங்டன், அமெரிக்கா - 1. இந்த அந்நிய பாஷைகளைப் பேசுதலின் பேரிலான தலைப்பு (பொருள்). இது பெந்தெகோஸ்தே ஜனங்களிடமுள்ள ஒரு பிரச்சினையாக உள்ளது. எனக்கும் இது ஒரு-ஒரு பெரிய விவகாரமாக இருந்தது. நான் இந்த மேடையில் எந்தப் பிரச்சனையும் உண்டாக்க மாட்டேன் நான் அவ்வாறு செய்ய மாட்டேன், ஏனென்றால் நான்-நான் இப்பொழுது வெவ்வேறு குழுவினரால் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளேன். ஒரு-ஒரு கிறிஸ்தவ பண்பாளராக, நிச்சயமாகவே நான் யாரையும் புண்படுத்த விரும்ப மாட்டேன். நான்... அவர்கள் தங்களுடைய இடத்தில் என்னைக் கொண்டிருக்கும்படியாக போதுமான அளவு கிறிஸ்தவர்களாக இருந்து, அவர்களு டைய ஜனங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பார் களானால், நான்-நான் அதைக் குறித்த எதையுமே கூறாமல் இருக்கும்படியாக போதுமான அளவு சகோதரனாக இருக்கவே விரும்புகிறேன். பாருங்கள்? நான் வெறுமனே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கம் பண்ணுகிறேன், அப்படியானால் அவர்கள்... அவர்கள் அங்கே தாங்கள் விரும்புவதைச் செய்யட்டும். இப்பொழுது, ஆவியால் நிறைந்த ஜனங்கள் (பாருங் கள்?) சிலசமயங்களில், அவர்கள் தங்களுடைய சொந்த பாஷையில் எந்த-எந்தக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு பரிசுத்த ஆவியால் மிகவுமாக நிறையப்படுகிறார்கள் என்று நான் நம்புகிறேன். நான்-நான் அதை விசுவாசிக்கிறேன். சிலநேரம் வேறொருவருக்கு அது சம்பவிக்கிறது, அது எனக்கு சம்பவித்தது, மற்றவர்களுக்கும் அது சம்பவித்திருக்கிறது....ஆனால் நீங்கள் பாருங்கள், அதில் இருக்கிற காரியம் என்னவென்றால், முதலில் பரிசுத்த ஆவியானவர் அங்கே அதில் இருந்தாக வேண்டும். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா? அது முதலில் அங்கே இருந்தாக வேண்டும். பாருங்கள்? அந்நிய பாஷைகளில் பேசுதல் பரிசுத்த ஆவியின் ஒரு வரமாக (gift) இருக்குமோ என்பது போன்றே அது இருக்கிறது. 2. இப்பொழுது, நான் ஒரு-ஒரு பையனாக இருந்து, என்னுடைய தாயாராலும், என்னுடைய தகப்பனாலும் எனக்கு கல்வி கற்பிக்கப்பட்டிருந்து, நீங்கள் என்னை தத்தெடுக்க விரும்பி, நான் என்னுடைய கத்தியை உங்களுக்குக் கொடுக் கிறேன் என்றால். இப்பொழுது, நீங்கள் என்னுடைய வெகு மதியைப் (gift) பெற்றிருக்கிறீர்கள், ஆனால் என்னை அல்ல. புரிகிறதா? இப்பொழுது, அந்நிய பாஷைகள் என்பது பரிசுத்த ஆவியின் ஒரு வரமாக இருக்கிறது. அது பரிசுத்த ஆவியாக இருக்கிறதென்று கூறுகிற எந்த வேதவாக்கியமும் வேதாகமத் தில் இல்லை. அது பரிசுத்த ஆவியின் ஒரு வரமாக இருக்கிறது. இப்பொழுது, கவனியுங்கள். அப்போஸ்தலர் 2:38- ல். “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும், உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” ஏனென்றால் ஒவ்வொரு மனுஷனும் தான் பிறந்த இடத்தில் பேசப்படும் தன்னுடைய ஜென்ம பாஷையை பேசுகிறதை அவர்கள் கேட்டதின் நிமித்தமாக, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாருங் கள்? நீங்கள் மனந்திரும்புவீர்களானால், பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று அவன் கூறினான். இப்பொழுது, வில்லியம் பிரன்ஹாம் கொடுக்கும் வெகுமதி வில்லியம் பிரன்ஹாம் அல்ல. புரிகிறதா? இப்பொ ழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், "நல்லது, தேவனுடைய வரம் என்பது பரிசுத்த ஆவியே. பரிசுத்த ஆவிதான் தேவனாக இருக்கிறார்” என்று நீங்கள் கூறலாம். உங்களால் எப்படி... செய்ய முடிந்தது என்று பாருங்கள். அதை அங்கே உபயோகப்படுத்த முடியாதிருந்ததே. நல்லது, நான் பேசுகிற எல்லாமும், அது நிச்சயமாக வேதவாக்கியத்தோடு வரிசைப் படுத்தப்பட வேண்டும். நான்-நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இப்பொழுது, அவர் என்னிடம் கூறும்போது மாத்திரமே நான் ஏற்றுக்கொள்ளுகிறேன், அப்படியானால் அவர் எப்போதுமே வேதவாக்கியத்தோடு அதை தெளிவு படுத்துகிறார். அவர் அவ்வாறு தெளிவுபடுத்தவில்லை என்றால், நான் அதை நம்ப மாட்டேன், அவர் பாதை நெடுகிலும் எவ்வளவாக என்னிடம் கூறின போதிலும், இன்னுமாக அவர் எப்பொழுதாவது என்னிடம் கூறின ஏதா வது வேதப்பூர்வமாக இல்லாதிருக்குமானால், அது சரியாக இருக்காது, ஏனென்றால் வேதவாக்கியம் தான் முற்றிலுமாக நம்முடைய அடிப்படையாக இருக்கிறது. நாம் நம்முடைய- நம்முடைய இரட்சிப்பை உணர்ச்சிவசப்படுதல்களின் பேரி லோ, அல்லது மற்றவர்களுடைய அனுபவங்களின் பேரிலோ, அல்லது நம்முடைய சொந்த அனுபவத்தின் பேரிலோ கட்ட முடியாது. அது தேவனுடைய வார்த்தையாக இருந்தாக வேண்டும் (புரிகிறதா?), ஏனென்றால் அது-அதுதான் உண்மையான முத்திரையாக உள்ளது. 3. இப்பொழுது, நான் முதலில் இந்த விவாதத்தில் துவங்கும் போது, இங்கே ஒலிநாடாவை தொடங்குவதற்கு (get on) சகோதரன் லியோ அவர்கள் ஆவலாக இருக்கிறார், நான் நினைக்கிறேன்... அது மின்னிக்கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அவர் இப்பொழுது அதை ஓட விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். சகோதரன் லியோ அவர்களே, நீங்கள் இதைப் புண்படுத்துவதற்கோ அல்லது எதற்காவது உபயோகப் படுத்த நான் விரும்ப மாட்டேன், ஆனால் வெறுமனே.. நீர் அவ்வாறு செய்ய மாட்டீர் என்று எனக்குத் தெரியும். சகோதரர்களே, நான் உங்களிடம் கூற மாட்டேன், ஒரு மனிதன் அந்நிய பாஷைகளில் பேசினால், அது சரிதான்; ஆனால் அவன் அந்நிய பாஷைகளைப் பேசாவிட்டால், அவன் அதைப் பெற்றிருக்கவில்லை என்பதற்கான எந்த அடையாளமாகவும் அது இன்னும் இல்லை. அவன்... உலர்ந்த மாட்டுத் தோலின் மீது பட்டாணிக் கடலைகளை கொட்டுவது போல, ஜனங்கள் அந்நிய பாஷைகள் பேசி, அவர்கள் எவ்வளவு கூடுமோ அவ்வளவு விரைவாகச் சென்று, வேறொரு மனிதனுடைய மனைவியோடு வாழுகிறதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? மந்திரவாதிகள் மனிதனுடைய மண்டையோட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து, பிசாசை நோக்கிக் கூப்பிட்டு, அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். மந்திரவாதி களும் இந்திய மாயவித்தைக்காரரும், ஒரு வகை நடனம் (bull-dance) (ஆட) வரும் போது, அவர்கள் இந்தப் பெரிய வட்டத்தைச் சுற்றிலும் உட்கார்ந்து, பின்பு வெளியே வந்து, தங்கள் எல்லா மந்திரங்களையும் செய்து, அந்த மந்திரவாதி (devil doctor) உள்ளே வந்து, அவர்கள் சுற்றி சுற்றி வந்து, மேலும் கீழும் குதித்துக்கொண்டும், கத்தி கூச்சலிட்டுக் கொண்டும், இந்த ஒருவகை முரசை (tom-toms) அடித்துக் கொண்டும் இந்த எல்லா காரியங்களையும் செய்து கொண் டிருப்பதை நான் கண்டிருக்கிறேன், அப்போது அந்த மந்திர வாதி உள்ளே வந்து அந்நிய பாஷைகளில் பேசி, அவர் களுக்கு அதன் அர்த்தத்தை சொல்லுவதை நான் கண்டிருக் கிறேன். பாருங்கள்? நான் மந்திரவாதிகளின் முகாம்களில் இருந்திருக்கிறேன், அங்கே நானே உள்ளே நடந்து சென் றிருக்கிறேன், அது மிகவும்... நீங்கள்... அது.... அப்படிப்பட்ட ஒன்றில் நீங்கள் போக வேண்டுமென்று உங்களிடம் கூறும் ஆலோசனை அல்ல இது, ஆனால் ஒரு ஊழியக்காரனாக, நான் எதைக் குறித்துப் பேசிக் கொண் டிருக்கிறேனோ அதை நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும், வேறு யாரோ ஒருவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வ தல்ல, ஏனென்றால் அது... நான்-நான் நிச்சயமாக அதை நானே தனிப்பட்ட முறையில் அறிந்திருக்க வேண்டும். புரிகிறதா? ஏனென்றால் சகோதரன் ஜோன்ஸ் இவ்வாறு கூறினார், அல்லது நான் ஒரு புத்தகத்தில் இதை வாசித்தேன் என்று கூறிவிட முடியாது. நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்க வேண்டும், ஏனென்றால் அங்கே பெரும் எண்ணிக்கையிலான ஜனங்கள் நான் கூறுவதைக் கேட்கிறார்கள், அந்தக் கடைசி நாளில், ஒருகூட்டம் இழக்கப்பட்ட ஜனங்களுடன் வர நிச்சயமாகவே நான் விரும்பவில்லை. சத்தியமாக இருக்கும் அதைக் குறித்து நான் எதையாகிலும் கூறுவதற்கு முன்பே நான் அதை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஊழியக்காரனும் தான் எந்தப் பாடத்தின் பேரில் தன்னுடைய ஜனக்கூட்டத்தாருக்கு பிரசங்கிக்கிறானோ, அந்த ஜனக்கூட்டத்தாருக்கு அவன் கடமைப்பட்டவனா யிருக்கிறான் என்று நினைக்கிறேன், அவன் பிரசங்கம் பண்ணுகிற அவனுடைய ஜனக்கூட்டத்தாருக்கு எதையும் கூறுவதற்கு முன்பாக, அவன் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறான் என்று தான் அறிந்திருப்பதைக் குறித்து அவன் நிச்சயமுடையவனாக இருத்தல் வேண்டும். 4. எனவே ஆவியுலக இடையீட்டாளர்கள் (spiritualists) இருக்கும் முகாம்களில் நான் இருந்திருக்கிறேன், அங்கே ஒரு பியானோ வரும், அதன் எடை அரை டன் அளவு இருக்கும், அது தரையை விட்டு மேலே எழும்பி வரும், மேலும் அறைக்குள் இருக்கும் கிட்டார் இசைக் கருவியிலிருந்து இசைக்கப்படும் இசையானது (strumming music) வந்து கொண்டிருக்கும், மற்றும் அதைப் போன்ற எல்லா காரியமும் நடந்து கொண்டிருக்கும், சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் ஒரு கோட்டானது, அதனூடாக வந்து உங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு நாற்காலியில் அமரும், கத்திகளும் முள்கத்தியும் ஊடாக வந்து கொண்டிருக்கும், நீங்கள் அவைகளைக் காணலாம், மந்திரவாதி ஒன்றை வைத் திருப்பான், அவன் ஒரு-ஒரு துண்டு தாளை கீழே வைத்து விட்டு, ஒரு பென்சிலை எடுத்து, அதற்கு மேலாக வைக்கும் போது, இந்த ஆவியானது வந்து மேலே புகைபோக்கி குழாய் (stovepipe) வழியாக வந்து, மறுபடியும் கீழே இறங்கி, "Shave and a Haircut-Two Bits என்று இசைத்துக்கொண்டே, அறியப்படாத பாஷைகளில் எழுதுவதைக் கண்டிருக்கிறேன், இந்த ஆவியுலக இடையீட்டாளன் (medium) (கரங்களை) நீட்டி இவ்விதமாக தானே ஒரே நேரத்தில் இழுத்து, அதைப் போன்று இவைகளை மேலும் கீழுமாக அதற்கு வியாக்கி யானம் சொல்லி, அதைக்கூறி, அந்த பாஷைகளுக்கு அர்த்தம் உரைத்து, என்ன கூறப்பட்டதோ அதைச் சொல்லு வான். எனவே நீங்கள் அந்நிய பாஷைகளைப் பேசி விட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டதாகக் கூறிவிட முடியாது. புரிகிறதா? ஏனென்றால் எனக்கு எனக்கு அதைக் காட்டிலும் நன்கு தெரியும். 5. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், நாம் அதை நியாயமானவிதத்தில் ஆலோசித்துப் பார்ப்போம். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள், அவ் விதமாகத்தான் நான் இதைச் செய்ய விரும்புகிறேன், ஏனென் றால் நான் புத்திசாலியான மனிதர்களிடம் பேசிக் கொண்டிருக் கிறேன் என்று உணருகிறேன். எனவே வேதவாக்கியத்தில், 1 கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில், அங்கே-அங்கே ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் இருப்பதாக அது கூறுகிறது. நல்லது அப்படியானால், கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள அந்த வரங் களில் பாஷைகளும் ஒரு வரமாக இருந்தது. அதை இவ்வாறு எடுத்துக்கொள்வோம், நாம் ஒரு விளக்கத்திற்காக அதைக் காண்பித்து, அதை எளிதாக ஆக்கு வோம். உங்களுக்கு அது புரிந்து விட்டது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்பதை நாம் நிச்சயப்படுத்திக்கொள்வோம். இந்த இந்த அறையானது கிறிஸ்துவினுடைய சரீரமாக இருப்பதாக எடுத்துக்கொள்வோம், ஒரே ஆவியினாலே நாம் இந்த அறைக்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம், இந்த அறைக்குள் ஓய்வெடுத்துக்கொள்வதற்காக ஒரு நாற் காலி என்ற வெகுமதி (gift) இருக்கிறது. (ஆங்கிலத்தில் gift என்ற வார்த்தைக்கு "வெகுமதி” என்ற அர்த்தமும் “வரம்” என்ற அர்த்தமும் உண்டு மொழிபெயர்ப்பாளர்) இங்கே ஒரு வெளிச்சமாகிய வெகுமதியும் (gift) இருக்கிறது. உஷ் ணத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வெகுமதியும் (gift) இங்கே யிருக்கிறது. இங்கே அசைந்தாடும் நாற்காலி என்ற வெகு மதியும் (gift) உண்டு. உட்காரவும் படுக்கவும் தக்க நீளமான நாற்காலி (lounge) என்ற வெகுமதியும் (gift) உண்டு, கம்பளம் என்ற ஒரு வெகுமதியும் (gift) உண்டு. ஒரு புகைப்படம் என்ற வெகுமதியும் (gift) உண்டு. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று புரிகிறதா? 6. அங்கே வரங்கள் (gift) உண்டு, ஆனால் நீங்கள் எவ்வாறு அந்த சரீரத்திற்குள் வருகிறீர்கள்? ஒரே ஆவியி னாலே நாம் எல்லாரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம், அப்படியானால் இந்த வெகுமதிகள் (gift) எதையும் நீங்கள் அனுபவிக்கலாம். புரிகிறதா? எனவே அந்நிய பாஷைகளில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அத்தாட்சியாக இருக்குமானால், இந்த மற்ற எல்லா காரியங்களும் கூட பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அத்தாட்சியாகத்தான் இருக்கிறது. நீங்கள் இந்த மற்ற எல்லா காரியங்களையும் செய்தாக வேண்டும், தீர்க்கதரிசனம் உரைத்தல், அர்த்தம் சொல்லுதல், ஞானத்தையும் அறிவையும் கொண்டிருத்தல் ஆகிய மற்றவைகளையும் செய்தாக வேண்டும். ஆனால் பிறகு அதைப் பொருத்துவதற்காக பவுல் சொல்லிக்கொண்டே போகிறான். பாருங்கள்? "எல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறீர்களா?” இல்லை. “அர்த்தம் சொல்லும் வரம் எல்லாருக்கும் உண்டா? ஆனால் தேவன்... தனித்தனியாக சபையில் நியமித்திருக்கிறார்.” பாருங்கள்? அவன் அப்படியே அவ்விதமாக அதை ஒழுங்குபடுத்தினான். 7. அதன்பிறகு 12வது அதிகாரத்தில்... இப்பொழுது, என்னுடைய... ஐ எடுத்துக்கொள்வதற்கு, நான் என்னுடைய விவாதத்திற்கு வரும் இடத்திற்கு நீங்கள் தொடர்ந்து போவீர்களானால். பரிசுத்த ஆவியைப் (பெற்றதின்) ஆரம்ப அத்தாட்சி அது அன்பாக இருக்க வேண்டுமென்று நான் அதை எடுத்துக்கொண்டேன். மற்ற மனிதர்களோ அதை அந்நிய பாஷைகளில் பேசுதலுக்கு எடுத்து விட்டனர் (பாருங் கள்), அத்தாட்சியாக அந்நிய பாஷைகளைக் கொண்டிருப்ப தாக அதை ஏற்றுக்கொண்டு விட்டனர். இப்பொழுது, பவுல் அதை 1 கொரிந்தியர் 13வது அதிகாரத்தில் கூறியுள்ளான், அடுத்ததாக, அவன் இப்பொழுது கூறுவது என்னவென்றால், "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் (அது இரு வகையிலும் இருக்கிறது) அன்பு எனக்கிராவிட்டால், நான் ஒன்றுமில்லை. ஞானம் எனக்கிருந்தாலும்..” என்று கூறுகிறான். இப்பொழுது, அவன் இங்கே மேலேயுள்ள இந்தச் சரீரத்தில் இந்த வரங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறான் (பாருங்கள், பாருங்கள்?), கொடுக்கிறவர் இல்லாமல் வரங்களை வைத்தி ருப்பது (புரிகிறதா?), அன்பு. பாருங்கள்? “நான் ஞானத்தை உடையவனாயிருந்து, தேவனைக் குறித்த சகல அறிவையும், சகல வேதவாக்கியங்களையும் அறிந்திருந்து, மகத்தான எந்த வேதசாஸ்திரிகளையும் போன்று அவைகளை ஒன்றாகப் பொருத்திக் காட்ட என்னால் கூடுமானாலும், அன்பெனக்கிரா விட்டால், அதுதான் பரிசுத்த ஆவி, நான் ஒன்றுமில்லை” என்றான். இப்பொழுது, பரிசுத்த ஆவி தான் தேவன் என்று நமக்குத் தெரியும். நாம் அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண் டும். பாருங்கள்? அதுதான் தேவன். நல்லது அப்படியானால், தேவன் அன்பாகவே இருக்கிறார். பாருங்கள்? இப்படியிருக்க நீங்கள் தேவனைக் கொண்டிருக்காமலே தேவனுடைய வரங் களில் எதையும் கொண்டிருக்க முடியும். தேவன் அன்பாகவே இருக்கிறார், அந்த வரங்களில் எதையும் சாத்தானால் ஆள் மாறாட்டம் செய்ய முடியும். புரிகிறதா? பாருங்கள், மிகவும் நெருக்கமாக அவனால் எதையும் ஆள்மாறாட்டம் செய்ய முடியும், ஏனென்றால் அவன் தாறுமாறாக்குகிறவன். பாவம் என்பது நீதி தாறுமாறாக்கப்படுவதாகும். 8. எனவே இந்த விவாதத்தில், சினேகமுள்ள இச்சகோதரன், அவர் அவர் பார்வையாளராக இருக்க, நான், "இப்பொழுது, நீர் கண்டிப்பாக வேதவாக்கியத்தோடு தரித்திருந்து, வேதவாக்கியத்தை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பீரென்றால், நான் உம்மோடு இதை விவாதிக்க விருப்பமாயுள்ளேன்” என்றேன். மேலும் நான், “பிறகு இந்த விவாதத்தின் முடிவில், நீர் என்னுடைய கரத்தைக் குலுக்கி, நாம் அப்பொழுதும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாக உணருவோம். ஏனென்றால் நீர் அவ்வாறு செய்யவில்லை என்றால், நான் அதைச் செய்ய மாட்டேன் (பாருங்கள்?), ஏனென்றால்....காரணம் என்னவெனில், அநேகமாக அது முடிவடையும் போது, நீர் உணருகிற அதே விதமாகவே நீர் அதை உணரப் போகிறீர், நானும் கூட (அவ்வாறே) உணருவேன்” என்றேன். "ஆனால் இங்கே வாக்குக்கொடுத்திருக்கும், வியாபார் புருஷர்களும் மற்றவர்களுமாகிய நடுவர்களை நாம் பெற்றி ருக்கிறோம், அது உங்களுக்குத் தெரியும், அவர்கள் அப்படியே அவர்கள் அப்படியே.. அவர்கள் இருபக்கங்களிலும் அக்கறை உள்ளவர்கள்; அவர்கள் அப்படியே எது உண் மையோ அதைத்தான் எடுக்கிறார்கள். அவர்களுடைய தீர்மானம் என்னவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, குறிப்பிட்ட வேதவாக்கியத்தை, இந்த வேதவாக்கியம் கொடுக் கப்பட்ட விதமாகவே இதைப் பொருத்துவதற்கு ஐந்து அல்லது ஆறு மனிதர்கள் இருக்கிறார்கள், யார் அதை எடுப்பது? உண்மையில் யார் அதன்பேரில் வெளிச்சத்தைக் கொடுப்பது; அதைக் கூறுகிறவர் அவர் ஒருவர் தான். நீங்கள் பாருங்கள்? 9. எனவே அவர் வழக்கமாக செய்வதைப் போன்று, அப்போஸ்தலர் 2 மற்றும் 4ம் அதிகாரத்தில் துவங்கினார், அது உங்களுக்குத் தெரியும், அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வார்த்தையின்படியே அந்நிய பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். நல்லது, நான்... அதன்பிறகு அவர் அங்கிருந்து அப்போஸ்தலர் 10:49க்குப்போனார், இந்த வார்த் தைகளைப் பேதுரு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். நல்லது, பிறகு... அதன்பிறகு அவர் அப் போஸ்தலர் 19:5க்குப் போனார், அல்லாமலும் பவுல் அவர் கள்மேல் கையை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள். எனவே அது அவருடைய நேரத்தில் மிக அதிகமானவற்றை எடுத்துக்கொண்டது, பிறகு அது என்னுடைய நேரமாக இருந்தது. நாங்கள் ஏறக்குறைய 7:00 மணியிலிருந்து, காலையில் சுமார் 2:00 மணி வரை இருந்தோம். பாருங்கள்? எனவே அது நீண்டதாக இருந்தது. எனவே பிறகு அவர் திரும்பி வந்த போது, அவர் அதன்பேரில் ஏறக்குறைய முப்பது அல்லது முப்பத்தைந்து நிமிடங்களைக் கொண்டிருந் தார். பிறகு அவர்கள் ஜனங்களுக்கு ஓய்வு கொடுத்தனர்; அதன்பிறகு நான் மீண்டும் பேச அனுமதித்தனர், நான் பேச அனுமதித்தனர். எனவே நான் அவருடைய வேதவாக்கியங் களை விட்டு ஒருபோதும் விலகிச் செல்லவில்லை, நான் சரியாக அவருடைய வேதவாக்கியத்திலேயே தரித்திருந்தேன். நீங்கள் சரியாகவும், நியாயமாகவும் இருக்கக் கூடியதான ஒரே வழி அதுதான்... நான் மற்ற எவரையும் போலவே, சத்தியம் என்னவென்பதை அறிந்துகொள்ள ஆயத்தமாயிருக்கிறேன். 10. நான் நிச்சயமாகவே தவறாக இருக்க விரும்ப வில்லை, நான் இங்கேயே சரியாக இருப்பது நல்லது, ஏனென்றால் நான் அங்கே போய்ச் சேரும்போது, அது மிகவும் காலதாமதம் ஆகிவிடும். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் விரும்புகிறீர்கள்... அந்த வயதான கறுப்பின சகோதரன், “ஆற்றண்டையில் எந்தத் தொல்லையும் நேர்ந்திட எனக்கு விருப்பமில்லை” என்று கூறினது போல. எனவே அது சரிதான். நான்-நான் விரும்புகிறேன்... அது ஒரு பனிமூட்டமான காலையாக இருக்கப் போகிறது, அதன்பிறகு அது ஒரு பயங்கரமான நேரமாகவும் இருக்கப் போகிறது, என்னுடைய பயணச்சீட்டை (அனுமதிச்சீட்டை) என்னுடைய கரத்தில் வைத்திருப்பதையே நான் நிச்சயமாக விரும்புகிறேன், அது சரியாக கையொப்பமிடப்பட்டுள்ளது, ஏனென்றால் நான்- நான் விரும்பவில்லை... அது அப்போது மிகவும் காலதாமத மாகியிருக்கும். நீங்கள் பாருங்கள்? எனவே, மேலும் நான்.... எதையாகிலும் விவாதித்துக் கொண்டிருப்பதில், நான் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் அதில் போகிறேன். நான் அறிய விரும்புகிறேன், நான் தவறாக இருந்தால், நான் நிச்சயமாகவே நான் தவறாக இருப்பதை அறிய விரும்புகிறேன் (பாருங்கள்?), எனவே என்னால் சரியாக இருக்க முடியும். அந்தக் காரியங்களின் பேரில் உடன்பட்டு, அதை ஒரு பொதுவான உணர்ச்சியாக ஏற்படுத்திக்கொள்ளக் கூடுமானால், அது எனக்கு விருப்பம் தான், ஆனால் நான்-நான் -நான் அப்படியே....அது தவறாக இருக்குமானால், அது அப்படியே தவறாகத்தான் இருக்கிறது. நீங்கள்... அங்கே கறுப்பு வெள்ளை பறவை என்று கிடையாது, அல்லது (ஒரே நேரத்தில்) குடித்த மனிதனாகவும் குடிமயக்கமில்லாத மனிதனாகவும் இருக்க மாட்டான். புரிகிறதா? அது ஒன்றில் சரியாக இருக்கிறது, அல்லது அது தவறாக இருக்கிறது. அது-அது -அது... தவறையும் உண்மையையும் உங்களால் ஒருங்கே கொண் டிருக்க முடியாது. அது ஒன்றில் சத்தியமாக இருக்கிறது அல்லது அது தவறாக இருக்கிறது. புரிகிறதா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், இல்லையா, சகோதரர்களே? மேலும் நிச்சயமாகவே, வேதவாக்கியம் சரியாக இருக்குமானால், நாம் வேதவாக்கியத்தோடு தரித்திருப்போம். சபையானது சரியாக இருக்குமானால்... நான் அந்த மதகுருமார்களிடம் அதைத்தான் கூறினேன். நான், “சபையானது சரியாக இருக்குமானால், சபையோடு தரித்திருங்கள்” என்று கூறினேன். அவர், “நல்லது, சபை சரியாகத்தான் உள்ளது” என்றார். நான், “அப்படியானால், சபையானது... என்று நீர் சொல் லுகிறீர். இங்கேயுள்ள வேதாகமம் முதலாவது சபையினுடைய சரித்திரமாக உள்ளது. நல்லது, அது அவ்வாறு இருக்கு மானால், அது தவறிப்போகாத சபையாக இருக்கிறது, ஏன் நீங்கள் அதிகமானவற்றை மாற்றிப் போட்டிருக்கிறீர்கள்? நீங்கள் பாருங்கள்....” என்றேன். 11. அதன்பிறகு அது அவருடைய விவாதத்தை அங்கே கொடுக்கச் செய்தது. நீங்கள் பாருங்கள்? நான், "கிறிஸ்து கத்தோலிக்க சபையை ஸ்தாபித்தார் என்று சொன் னீர்” என்று கூறினேன். பாருங்கள்? “அவர் கத்தோலிக்க சபையை ஸ்தாபித்திருப்பாரானால், அப்போஸ்தலனாகிய பேதுருவும் அவர்கள் எல்லாரும் முதலாவது கத்தோலிக் கர்களாக இருந்திருப்பாரானால், நல்லது, அப்படியானால் நானும் கூட கத்தோலிக்கன் தான். சரியாக அவர்கள் சொன்னதையே நானும் கூறினேன். நல்லது, நீங்கள் இப்பொழுது வரையில் இங்கே தூரமாக இருக்கிறீர்களே, பாருங்கள்?” என்றேன். நான், “அவர்கள் கூறின எதுவுமே உங்களிடம் இல்லையே” என்றேன். பாருங்கள்? “ஏன், அந்த முதலாவது போப்பாகிய பேதுரு சொன்னார், கிறிஸ்து இயேசுவைத் தவிர தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையே மத்தியஸ்தர் வேறு யாரும் இல்லை, அவர் மட்டுமே மத்தி யஸ்தராக இருக்கிறார் என்று அவன் சொல்லியிருக்கிறான், இப்பொழுது நீங்கள் அவர்களில் பத்தாயிரக்கணக்கான வர்களைப் பெற்றிருக்கிறீர்களே. இப்பொழுது... முதலாவது போப் சரியா, அல்லது இந்த போப் சரியா? என்றேன். புரிகிறதா? யார் சரி?” அவர், "நல்லது, நீங்கள் பாருங்கள், கத்தோலிக்க சபைக்கு வல்லமை உண்டு" என்றார். நான், “அப்படியானால் அதை எழுதி வைத்திருக்கிற முதலாவது கத்தோலிக்கர் எப்போது சொன்னார், வானத்தி லிருந்து ஒரு தூதன் வந்து, வேறு எந்த சுவிசேஷத்தையாவது பிரசங்கிப்பானானால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன் என்று கூறப்பட்டுள்ளது, அவன் ஒரு போப்பாகவோ, அல்லது ஒரு மதகுருவாகவோ, அல்லது அவன் யாராகவும் இருக்கலாம், இந்தப் புத்தகத்திலிருந்து எடுத்துப்போடவோ, அல்லது இதனோடு சேர்க்கவோ செய்கிறவன் எவனும்.... லிருந்து எடுத்துப்போடப்படுவான். ஐயா, நீர் ஏதோவொரு இடத்தில் முழுவதும் குழப்பமடைந்திருக்கிறீர். ஒன்றில் உம் முடைய முதலாவது சபை சரியாக இருக்கும், அல்லது இந்த ஒன்று சரியாக இருக்கும். உம்முடைய முதலாவது சபை சரியாக இருக்குமானால், இந்த ஒன்று தவறாக இருக்கிறது” என்றேன். புரிகிறதா? நான், "நான் முதலாவது கத்தோலிக் கர்களுடன் தான் தரித்திருப்பேன். பாரும்? அந்தவிதமாகத் தான் அவர்கள் கத்தோலிக்கர்களாக இருந்தார்கள்” என்றேன். எனவே நீங்கள் காண்கிறீர்கள், நீங்கள் சரியாக இருக்க வேண்டும். 12. நாம் மட்டும்.... ஒரு விவாதத்தை நடத்துவதற்கு, நீங்கள் உங்கள் கரங்களை அதன்மேல் வைக்கக்கூடியதான, அடிப்படையாக உள்ள ஏதோவொன்றிற்கு நீங்கள் திரும்பி வர வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்களோ, மற்ற ஒவ்வொருவரும் நம்புகிறபடியான உங்கள் நம்பிக்கைகளை கொண்டிருப்பதற்கு அவ்வளவு அதிகமான உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் நாம் திரும்பி வரவேண்டியவர்களாய் இருக்கிறோம். நாம் துவங்குவதற்கு அங்கே ஏதாவது ஒரு இடம் இருக்க வேண்டும், “இதுதான் அது” என்று கூறும்படியான ஏதோவொரு இடம் இருக்க வேண்டும், ஏனென்றால் வேறு வார்த்தைகளில் உங்களால் விவாதிக்க முடியாது. புரிகிறதா? நாம் இருவரும்... நான், "நல்லது? பிரன்ஹாம் கூடாரம் தான் சரி” என்று கூறினேன். மேலும் நீங்கள் சொல்லுகிறீர்கள்... அவர் சொல்லுகிறார்.... நீங்கள், "இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சபை தான் சரி...” என்று கூறலாம். என்ன சொல்லுகிறீர்கள்? [பார்வையாளர்களில் உள்ள சகோதரன், சகோதரன் பிரன்ஹாமிடம் பேசுகிறார் ஆசிரியர்.) ஆமாம், அவர் ஆர்மீனியராகவோ, மற்றவர்களா கவோ இருக்கட்டும், உங்களுக்குத் தெரியும், நீங்கள் டச்சு சீர்திருத்த (சபையை) எடுத்துக்கொள்ளுங்கள். நல்லது இப் பொழுது, நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இப்பொழுது, அங்கே ஏதோவொரு இடம் இருக்க வேண்டும். நல்லது, நீங்கள் திரும்பிச் சென்று உங்களுடைய கத்தோலிக்க வேதபாட வினாவிடை புத்தகங்களிலிருந்தோ (catechisms), மற்ற எல்லாவற்றிலிருந்தும் மேலும் அதைப்போன்ற மற்றவை களிலிருந்தும் மேற்கோள் காட்டலாம். அப்போது நாம் சபைக்கு மாத்திரமே திரும்பிப் போகிறோம், அப்போது நாம் எங்கே ஸ்தாபிக்கப்பட்டோமோ, அங்கே நம்முடைய - நம் முடைய ஸ்தாபக ஸ்தாபகர்களிடமே திரும்பிப் போகி றோம், ஆனால் நாம் எங்கே இதை அஸ்திபாரப்படுத்து கிறோம். பாருங்கள், சரியாக இருக்கும் ஏதோவொரு இடம் அங்கே இருந்தாக வேண்டாமா? அப்படியே நீங்கள் பாராளுமன்றத்தில் ஒரு நியமத் தைப் பேசிக் கொண்டிருப்பது போன்று சரியாக இருக்கும் ஏதோவொன்றை நீங்கள் கொண்டிருக்கத்தான் வேண்டும். நீங்கள் அதைப் பெற்றிருந்து நீங்கள் அதை அங்கே ஒழுங்காய் வைத்து, ஜனங்களுக்குக் காண்பித்தாக வேண்டும். நீங்கள் துவங்குவதற்கு ஏதோவொரு இடத்தைக் கொண் டிருக்க வேண்டும். நல்லது, அந்தவிதமாகத்தான் நாம் வேதாகமத்தையும் செய்ய வேண்டும். 13. எனவே நான் அவரோடு அப்போஸ்தலர் 2-ஐப் பற்றிய கேள்விக்குத் திரும்பி வந்தேன். நான், “இப்பொழுது, நீர் அப்போஸ்தலர் 2-ன்பேரில் தான் நீர் அதை அடிப்படை யாக வைக்கப் போகிறீர் என்று நீர்-நீர் சொல்லுகிறீர்” என்றேன். எனவே அவரை ஓடிப்போகச் செய்ய அவரை ஓடிப்போகச் செய்ய நான் ஏதோவொன்றை அவருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது அவ்வண்ணமாக அந்த வரிசையில், அவரால் இருக்க முடிந்தது அவரால் முடிந்தது என்னால் அவரிடம் பேச முடிந்து, உங்களுக்குத் தெரியும், அவரைத் துரத்தினேன். நான், "இப்பொழுது, நாம் நாம் அடிப்படையாகக் கொள்வோம்....நீர்... செய்வீரானால்” என்றேன். உங்களுக்கு நன்றி, சகோதரனே. "நீர் அப்படியே நீர் வேதவாக்கி யத்தோடு தரித்திருப்பீரானால்... இப்பொழுது, சகோதரனே, நான்-நான் உம்முடைய அணுகுமுறையைப் பாராட்டுகிறேன்” என்றேன். பாருங்கள்? நான், "நீர்.... அவர்களெல்லாரும் பரி சுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக் குத் தந்தருளின வார்த்தையின்படியே வெவ்வேறு பாஷை களில் பேசத் தொடங்கினார்கள் என்று நீர் இங்கே சொன்னீர். வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அங்கே எருசலேமிலே வாசம் பண்ணியிருந்தார்கள்; அந்தச் சத்தம் எல்லாம் பரவினபோது, அவர்கள் கூடிவந்து, அவர்கள் பிறந்த இடத்திலுள்ள தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள் என்று நீர் இங்கே சொல்லியிருக்கிறீர்” என்றேன். அவரை இங்கிருந்து சற்று அப்பால் வழிநடத்த வேண்டியிருந்தது. நான், "இப்பொழுது, சகோதரனே, நான் இதை உம்மிடம் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது, இந்த அவிசுவாசிகள்....என்று வேதாகமம் கூறுவதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது, (பாருங்கள்?), கட்டிடத்தின் இந்த மேலறையில், மேலிருந்து அந்தக் கோபுரத்திலிருந்து இறங்கி இங்கு மேலிருக்கும் இந்த ஜனங்கள் என்று அது கூற வில்லை; அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிறையப் பட்டார்கள் என்று அது கூறுகிறது, இங்கே வெளியிலிருக்கும் இவர்கள், தாங்கள் பிறந்த இடத்திலுள்ள தங்கள் தங்கள் சொந்த பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டார்கள் என்று அது கூறுகிறது. புரிகிறதா? அவர்கள் கூறுவதை அவர்கள் கேட்டார்கள், ஒவ்வொரு மனிதனும் அதைக் கேட்டார்கள். பாருங்கள்? பாவிகளும் தாங்கள் பிறந்த இடத்திலுள்ள தங்கள் சொந்த பாஷையிலே அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள், அவிசுவாசிகளும் அவ்வாறே கேட்டார்கள். அப்படியானால் நீர் பெற்றிருக்கிற விதத்தில்....உம்முடைய பெந்தெகோஸ்தே வியாக்கியானம் சரியென்றால் (பாருங்கள்?),” என்றேன். இப்பொழுது, நான், “அப்படியானால் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஏதோ தவறு இருக்க வேண்டும், அல்லது உம்முடைய வியாக்கி யானத்தில் தவறு இருக்க வேண்டும்" என்றேன். 14. நான், "இப்பொழுது, சகோதரனே, நான் உம்மிடம் இதைக் கேட்க விரும்புகிறேன், நீர் எங்கே பரிசுத்த ஆவி யைப் பெற்றீர்?” என்றேன். அவர் என்னிடம் அந்த நிமிடத் தையும், மணியையும், நேரத்தையும் கூறினார், அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் சற்று கர்வமுள்ளவராகவும் இருந்தார், அவர் ஒருவிதத்தில் சற்றே குழப்பமடைந்திருந்தார், உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் அவர் வியர்த்துக் கொட்டியவண்ணம் இருந்தார். அதற்கு எந்தக் காரணமும் இல்லாதிருந்தது. பாருங்கள்? ஒரு வயல் நிலத்தில் வேலியால் அடைபட்டு, இந்த உலகத்தில் அதனால் வெளியே போகும்படியாக எந்த ஒரு வழியும் இல்லாதிருக்கும் ஒரு முயல் என்னிடம் இருக்கு மானால், நான் அந்த வாசலிலேயே நின்று கொண்டிருப்பேன்; அது திரும்பி வந்து தான் ஆக வேண்டும், ஏனென்றால் அது வெளியே போகவில்லை. எனவே நீங்கள் வியர்த்து வழிந்து கொண்டு இருக்க வேண்டியதில்லை. புரிகிறதா? சரியாக... என்று உங்களுக்குத் தெரியும். அது வெளியே போக அங்கே ஒரு துவாரமும் எவ்விடத்திலும் இல்லை என்பது உங்க ளுக்குத் தெரியும். எனவே நீங்கள் விரும்பும் எந்த வேத வாக்கியத்திலும் சரியாக தரித்திருக்கலாம். அவர் அதற்குத் திரும்பி வந்து தான் ஆக வேண்டும். எனவே அவர் -அவர் எங்கேயும் போய்விடவில்லை. நீங்கள் அந்த வயலில் சுற்றிலும் எல்லாவிடத்திலும் அதைத் துரத்த வேண்டிய தில்லை. அப்படியே அங்கேயே நில்லுங்கள், அது உங்களிட மாக திரும்பி வரட்டும். 15. எனவே பிறகு நான், “ஐயா, இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது, எவ்வாறு நடந்து கொண்டீர்கள்?” என்று கேட்டேன். "தேவனுக்கு துதி உண்டாவதாக, ஆவியானவர் அவர்களுக்குத் தந்தருளின வார்த்தையின்படியே, நானும் வேறு பாஷைகளில் பேசினேன்.” நான், “சரி, யாரெல்லாம் அங்கே இருந்தார்கள்?” என்றேன். "ஏறக்குறைய 150 பேர் அங்கேயிருந்தார்கள்” என்றார். "நீர் ஒரு சபையிலா இருந்தீர்?” "ஆம், ஐயா" "அவர்கள் எல்லாரும் ஆங்கிலம் பேசும் ஜனங்களா?” "ஆமாம்." நான், "அப்படியானால் எப்படி நீர் பேசினீர்?” என்று கேட்டேன். அவர், "நான் அந்நிய பாஷைகளில் பேசினேன்” என்றார். நான், "நீர் பேசிக் கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவரைக் குறித்து சாட்சி கொடுத்தீர்” என்றேன். "ஆமாம், ஆமாம்.” “அதுதான் நீர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதா?” "ஆமாம்." "நீர் சொல்வதை சபையார் புரிந்து கொண்டார்களா?” அவர், "ஏன், புரிந்துகொள்ளவில்லை" என்றார். நான், "அப்படியானால் அப்போஸ்தலர் 2:4ன்படி அது இருக்கவில்லை, அப்படியானால் (உங்களுக்குப் புரிகிறதா?), ஏனென்றால் ஒவ்வொருவனும் தான் பிறந்த இடத்திலிருந்த தன்னுடைய சொந்த பாஷையில் அதைக் கேட்டானே. அங்கே எந்த வார்த்தைகளும் அருமையானதாக இல்லையே. ஒவ்வொருவனும் தான் பிறந்த இடத்தில் பேசப்படும் தன்னுடைய சொந்த பாஷையில் கேட்டானே. அப்படியானால் நிச்சயமாகவே நீர் அதை ஒருபோதும் அப்போஸ்தலர்2:4ன்படி பெறவேயில்லை” என்றேன். சரியாக அங்கே அவரி டமிருந்து வந்த அந்த வேதவாக்கியமே அதை தாக்கித் தள்ளினது, நடுவர் சரியாக அங்கேயே எனக்குக் கொடுத்தார், (பாருங்கள்?). 16. நான், "இப்பொழுது, பெந்தெகோஸ்தே நாளில், அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்த பாஷை யில் அதைக் கேட்டனர். அங்கே அதிக மென்மையான பேச்சாகவே இல்லையே” என்றேன். அவர், "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நீர் எங்கே குழப்பமடைந்திருக்கிறீர் என்பது எனக்குத் தெரிகிறது. நீர் பாரும், அங்கே, பரிசுத்த ஆவியானவர் முதலாவது வரும் போது, அங்கே.. நாம் தூதர்களுடைய பாஷையில் பேசு கிறோம். உமக்குப் புரிகிறதா? அங்கே-அங்கே அதற்கு எந்த வியாக்கியானமும் இல்லை. ஆனால் பிறகு நீர் வியாக் கியானத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, பவுல் சொன்னது போல, அப்போது அங்கே அவர்களில் சிலரிடத்தில் வியாக் கியானம் செய்யக்கூடிய ஒரு அந்நிய பாஷை இருக்கிறது” என்றார். நான், "ஆம், ஐயா, எனக்கு அது விளங்குகிறது. ஐயா, அப்படியானால் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் போது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுகையில், நாம் அந்நிய பாஷைகளில் பேசும் போது, அது எந்த மனித னுக்கும் விளங்காத பாஷையாக இருக்கிறது என்றா (புரிகி றதா?) என்னிடம் சொல்ல வருகிறீர்?” என்று சொன்னேன். அவர், “அதுதான்” என்றார். “அப்படியானால் நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அந்த சரீரத்திற்குள் வந்த பிறகு, அவர்களால் வியாக்கியானம் செய்யக்கூடிய ஒரு பாஷையை நாம் பெற்றுக்கொள்கிறோம். பாரும்? அதுதானே?” "ஆமாம்.” நான், “அப்படியானால் நீர் குதிரைக்கு முன்பாக வண் டியை பெற்றிருக்கிறீர்” என்றேன். பாருங்கள்? நான், "அப்படி யானால்..... இங்கே இருந்திருக்க வேண்டும்” என்றேன். பாருங்கள்? நான், "அப்படியானால் பெந்தெகோஸ்தே நாளில், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட போது, உங்கள் எல்லாரிடத்திலுமிருந்து வித்தியாசமாகத்தான் அதை அவர்கள் பெற்றுக்கொண்டனர். நீங்கள் எல்லாரும் அதைப் பெறுகிறீர்கள், யாருக்குமே அது புரிகிறதில்லை. அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது, எல்லாரும் அதைப் புரிந்து கொண்டார்களே. ஒன்றில் வியாக்கியானம் செய்யும்படியாக, இந்த ஆட்கள் அங்கே வெளியில் அந்த வரத்தைக் கொண்டிருந்து.... என்றேன். பாருங்கள்? 17. நான், “அப்படியானால், நீர் வியாக்கியானம் செய் யும் வரத்தை அவர்களுக்குக் கொடுத்திருப்பீரென்றால், அவர் களும் கூட பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்திருப்பார்களே, ஏனென்றால் நீர் (அந்நிய பாஷையில்) பேசும் வரத்தைப் பெற்றிருப்பது போன்று அதேவிதமாக அவர்களுக்கு வியாக் கியானம் செய்யும் (வரம்) இருந்தது, அவர்கள் இவர்களைப் பார்த்து கேலிசெய்து கொண்டும், பரிகசித்துக்கொண்டும் இருந் தனரே” என்றேன். புரிகிறதா? பாருங்கள், அதற்கான அடிப்ப டைகள் எதுவுமில்லை. எனவே நான், "அவர்கள்.. தேவன் இந்த மனிதர்களுக்கு ஏதோவொன்றைச் செய்தார் என்று நான் உம்மிடம் கூறினால் என்னவாக இருக்கும். இந்த... இப்பொ ழுது ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பாஷையில் அதைக் கேட்டார்களே?” என்றேன். அவர், "ஆனால் அவர்கள் அந்நிய பாஷைகளில் நான், "சகோதரனே, ஒரு நிமிடம் பொறும். அங்கே வெளியிலிருந்த அவிசுவாசி, 'இதோ, பேசுகிற இவர்களெல் லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர் களுடைய ஜென்மபாஷையிலே இவர்கள் பேசக் கேட்கி றோமே எப்படி? பேசுகிற இவர்கள் கலிலேயர்கள், கலிலேய (பாஷையில்) பேசிக் கொண்டிருக்கிறார்களே, ஆனால் நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷையில் இவர்கள் பேசக் கேட் கிறோமே' என்றார்களே” என்றேன். பாருங்கள்? அப்போது அவரால் எங்கேயும் நிற்க முடியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்? நான், "இப்பொழுது.” என்றேன். அவர் சொன்னார்...இப்பொழுது, நான், "நான்... அது அவ் விதமாக இருக்க முடியாது. அது சம்பவிக்கிறதை நான் கண்டிருக்கிறேன்” என்றேன். 18. ஒருமுறை ஒரு சிறு ஸ்பானிஸ் மொழி பேசும் பெண் இருந்தாள், நான் அதைக் குறித்து உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேனே. அவர்கள் அங்கேயிருந்த ஒரு ஒலிநாடாவில் அதைக் கேட்டார்கள் என்று நினைக்கிறேன். எனவே நான், "இப்பொழுது, நாம்... நான் இப்பொழுது பேசுவது போன்றே பேசிக் கொண்டிருந்தேன், நான் பேசு வதை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள், சற்று கழிந்து.... அவள் மொழிபெயர்ப்பாளரிடம், 'அவரால் ஸ்பானிஸ் மொழி யைப் பேச முடியாது என்று நான் நினைத்திருந்தேன்.' என்று கூறினாள். நல்லது, நாங்கள் அந்த ஒலிநாடாவை மறுபடியும் போட்டுக் கேட்டோம், அது ஆங்கில மொழியாக இருந்தது, ஆனால் ஆவியானவருடைய ஏவுதல் உண்டான போது, அவள் அதை ஸ்பானிஸ் மொழியில் கேட்டாள், அதன்பிறகு அவளால் ஒன்றையும் கேட்க முடியவில்லை, அல்லது ஆங்கிலத்தில் பேசப்பட்ட ஒரு வார்த்தையும் அவளுக்குப் புரியவில்லை. பாருங்கள்?” என்றேன். எனவே அது அவளுக்காகவே இருந்தது, அது அவ ளுக்கு என்ன இருந்ததோ அதைக் குறித்த எல்லாவற்றையும், காக்கை வலிப்பு வியாதியையும் அவளிடம் கூறினது. அவள் ஒரு கணப்படுப்பின் (fireplace) பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, மஞ்சள் நிற சோளத்தை சாப்பிட்டுக் கொண்டிருந் தாள், அவள் அதிகமாக சாப்பிட்டு, தீவிரமான வியாதியைப் பெற்றுக்கொண்டவளாய், படுக்கைக்குப் போனாள், அது காக்கை வலிப்பிற்குள் (epileptic fit) அவளைத் தள்ளியது. அதுமுதற்கொண்டு எப்போதுமே அவைகள் அவளுக்கு இருந்தது. பாருங்கள்? அப்போது வரை, அவள் குண மடைந்திருந்தாள். எனவே அவர், "நல்லது, இப்பொழுது ஒரு நிமிடம் பொறும். அவர்கள்...நீர்....எங்கேயிருக்கிறீர் என்று நான் காண்கிறேன்” என்றார். 19. நான், “சகோதரனே, எனக்கு வியப்பாயுள்ளது, நீர் இந்தக் கேள்வியைக் கேட்ட போது, ஏன் அப்படி செய்தீர்.... நீர் அப்போஸ்தலர் 2 மற்றும் 4ம் அதிகாரங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தீர், அதன்பிறகு நீர் அப்போஸ்தலர் 10:49 க்கு போனீர். சமாரியர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற போதுள்ள அப்போஸ்தலர் 8ம் அதிகாரத்தை நீர் எப்படி விட்டு விட்டீர்? அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசி னார்கள் என்று கூறுகிற ஒரு வேதவாக்கியமும் அங்கு இல் லையே” என்றேன். புரிகிறதா? நல்லது, நான் சொன்னேன் நான், "நீர் எருசலேமில் நடந்ததைக் கவனித்துப் பார்ப்பீரா னால், அங்கே (அவர்கள்) ஒன்று கூடினார்கள்... இப்பொழுது நான் அதைக் குறித்து உம்முடைய பட்சத்தில் சேர்ந்து கொள்கிறேன். பாரும்?” என்றேன். மேலும் நான், "அங்கே எல்லா தேசங்களிலுமிருந்து மனிதர்கள் ஒன்றாகக் கூடி வந்திருந்தார்கள். தொடர்ந்து பேசி, அதைச் சொல்லும், மேதியர்களும் பெர்சியர்களும், மதமாறினவர்களும், அந்நியர்களும், மக்கெதோனியர்களும் அங்கே கூடி வந்திருந்தார்கள். ஓ, உங்களுக்குத் தெரியும், அவர்கள் இருந்த இடத்தில் அவ்வித மாக எல்லாரும் கூடியிருந்தார்கள். இப்பொழுது, அவர்கள் எல்லாரும்.....அவர்கள் எல்லாரும் அங்கேயிருந்து, அவர்கள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள், ஒவ்வொரு மனித னும் தன்னுடைய சொந்த பாஷையில் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்” என்றேன். மேலும் நான், "இப்பொழுது, கொர்நேலியுவின் வீட்டில்..” என்றேன். இப்பொழுது, நான், "அவர்கள் அங்கே அந்நிய பாஷைகளில் பேசின போது, அவர்கள் இங்கே கடந்த காலத்தில் கேட்ட அதே காரியத்தை தங்கள் சொந்த பாஷையில் அவர்கள் கேட்டார்கள், ஏனென்றால் பேதுரு, ‘நாம் ஆதியில் பெற்றது போல, இவர்களும் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறதைக் காண்கிற நாம் இவர்களுக்கு தண்ணீரை மறுக்கலாமா?' என்று கூறினான்” என்றேன். நான், "தேவன் தம்முடைய திட்டத்தை ஒருபோதும் மாற்றவே மாட்டார். சரியாக இங்கே பரிசுத்த ஆவியானது முதலாவது விழுந்த இடமாகிய அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் நீர் நிற்பீரென்றால், அது-அது அதனுடைய மற்ற பாகங்களோடும் இணைந்து செல்லும்” என்றேன். 20. நான், "இப்பொழுது, அது மிக முக்கிய அத்தியா வசிய காரியமாக இருக்குமானால், சமாரியர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற போது, ஏன் அவர்கள் அந்நிய பாஷை களில் பேசவில்லை? காரணம் அவர்கள் எல்லாரும் யூத பாஷையில் பேசினார்கள். புரிகிறதா? பாருங்கள், அவர்கள் எல்லாரும் யூத பாஷையைப் பேசினார்கள். வேறொரு பாஷையைக் கொண்டிருக்க அவர்களுக்கு எந்தத் தேவையும் இல்லாதிருந்தது, ஏனென்றால் வந்திருந்த பரிசுத்த ஆவியைக் குறித்து அவர்கள் அப்படியே சாட்சி கூறிக் கொண்டிருந் தார்கள். அவர்கள் எல்லாரும் தங்கள் பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள், மற்றும்-மற்றும் எல்லாரும்....” என்றேன். மேலும்-மேலும் நான், "அங்கே அதற்கு எந்தக் காரணமும் இல்லாதிருந்தது. அங்கே மூன்று ஜாதியினர் தான் இருக் கிறார்கள் (பாருங்கள்?), அது யூதர்கள், சமாரியர்கள், மற்றும் புறஜாதிகள்” என்றேன். மேலும் நான், “இப்பொழுது, புறஜாதி கள், உமக்கு ஞாபகம் இருக்குமானால், கொர்நேலியு இத்தாலியா பட்டாளத்திலே நூறு மனுஷர்களுக்கு மேலிருந்த ஒரு நூற்றுக்கதிபதியாக இருந்தான். அங்கே விருத்தசேதனம் இருந்தது, மற்றும் ரோமர்களும் இத்தாலியர்களும் மற்றும்- மற்றும் எல்லாரும்-எல்லாரும் அங்கே ஒன்றாக இருந்தனர், அது எப்படியிருந்தாலும், அவன் பேசிக் கொண்டிருந்தான், ஏனென்றால் அது அப்படியே ஆதியில் நடந்தது போன்றே, இப்பொழுது.... 'நாம் ஆதியிலே பெற்றது போல, இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறதைக் காண்கிற நாம் தண்ணீரை தடுக்கலாமா?' எனவே நீர் பாரும், அது ஆதியில் இருந்த அதேவிதமாக இருக்க வேண்டியிருந்தது, ஒவ்வொரு வனும் தன்னுடைய சொந்த பாஷையில் கேட்க வேண்டி யிருந்தது” என்றேன். 21. நான், “வேதாகமத்தில், எல்லாரும் அந்நிய பாஷை களில் பேசின ஒருசமயம் இருந்தது என்று நான் ஒப்புக் கொள்கிறேன்” என்றேன். ஆனால் அவர் மிகவும் மன அமைதி இழந்தவராக காணப்பட்டார், அது உங்களுக்குத் தெரியும். மேலும் அவர், “அல்லேலூயா. இப்பொழுது தான், நீர் பாதையில் இருக்கிறீர்” என்றார். நான், “ஆம், ஐயா, அது பாபேலில் இருந்தது. யாருமே மற்றவர்கள் சொன்னதைப் புரிந்து கொள்ளவில்லை” என்றேன். நான் சொன்னேன் நான் சொன்னேன் நான், "பெந்தெகோஸ்தேவிலோ, ஒவ் வொரு மனிதரும் சொன்னதை அவர்கள் எல்லாரும் புரிந்து கொண்டனரே. அது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதலாக இருந்தது. உமக்குப் புரிகிறதா? பாபேலிலோ, இப்பொழுது பெந்தெகோஸ்தேயினர் பேசுவது போல, அவர்கள் எல்லாரும் அறியப்படாத பாஷைகளில் பேசினார்கள். மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்குமே தெரியவில்லை, ஒருவர் இதை உளறிக்கொண்டிருந்தார், ஒருவர் அதை உளறிக் கொண்டிருந்தார், அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை, ஆனால் அது பாபேலாக இருந்தது” என்றேன். பாருங்கள்? ஆனால் நான், “பெந்தெகோஸ்தேவிலோ, ஒவ்வொருவனும் தான் பிறந்த இடத்தில் உள்ள தன் ஜென்ம பாஷையிலேயே அதைக் கேட்டான்" என்றேன். அவர், "நல்லது, நான்-நான்...நீர்... நான் இன்னும் நம்புகிறேன். தேவனுக்கு மகிமை, நான் அதைப் பெற்றுக் கொண்டேன். அல்லேலூயா. அது சபையை பெலப்படச் செய்கிறது” என்றார். நான், "இப்பொழுது, பொறும், நாம் அதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கவில்லை. நாம் வேதா கம உபதேசத்தைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறோம். புரிகிறதா? நாம் இங்கே வேதவாக்கியத்தோடு தரித்திருக் கிறோம். பாரும்?" என்றேன். 22. எனவே பிறகு நாங்கள் அவ்வாறு தொடர்ந்து போகையில், அவர், "நல்லது, ஓ, அவர்கள் எல்லாரும் ஏவு தலின் கீழ் இருந்து, அந்நிய பாஷைகளில் பேசிக் கொண் டிருந்தார்கள் என்று நான் நம்புகிறேன். வியாக்கியானப்படுத்து தலை அவர்கள் கேட்டனர் என்று நான் நம்ப மாட்டேன். அவர்கள் ஏவப்பட்டு, அந்நிய பாஷைகளில் பேசிக் கொண் டிருந்தார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார். நான், "நான் உம்மோடு இணங்குகிறேன், நாம் அதன்பேரிலேயே நம்முடைய விவாதத்தை முடித்துக் கொள்வோம் (பாரும்?), அவர்கள் எல்லாரும் ஏவப்பட்டு அந்நிய பாஷை களில் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது, பாரும், அது அப்படியே இதைப் போன்று உள்ளது. நாம் எல்லாரும் இங்கே ஜெபர்ஸன்வில்லில் கூடி வந்திருக்கிறோம்” என்றேன். நாம் எல்லாரும் இங்கே யக்கிமாவில் கூடி வந்திருக்கிறோம். "பெந்தெகோஸ்தே பண்டிகை நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது, நீர் சுவிட்சர்லாந்துக்காரராகவும், நீர் ஜெர்மானி யராகவும், நீர் பிரஞ்சுக்காரராகவும் இருப்பதாக நாம் கூறப் போகிறோம். புரிகிறதா? நாம் எல்லாரும் இங்கே உள்ளே இருக்கிறோம், நீங்கள் ஒவ்வொருவருமே ஒரு ஜனக்கூட்ட மாக இருக்கிறீர்கள்” என்றேன். 23. இப்பொழுது, இதை நானே கூறிக்கொள்கிறேன், இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரன் பார்டர்ஸ் அவர்களும் சகோதரன் ஜீன் அவர்களும் மற்றும் நாம் எல்லாரும் அமெரிக்கர்களாக இருக்கிறோம். பாருங்கள்? உங்களிடம் ஒரு குழு உண்டு, நீங்கள் ஒரு கூட்டத்தைப் பெற்றிருக்கிறீர்கள், உங்களிடம் ஒரு கூட்டம் உண்டு, ஏனென்றால் அவர்கள் அவ்விதமாகத்தான் இருந்தனர். அவர்கள் மேதியர்களும் பெர்சியர்களும் இன்னும் யாரெல் லாம் உண்டோ அவர்கள் அங்கே கூடியிருந்தனர். நான், “இப்பொழுது, நாம்-நாம் எல்லாரும் இங்யிேருக் கிறோம், பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத் திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, இங்கேயிருக்கும் இந்த வீட்டை நிரப்புகிறது, அங்கே வெளியிலிருக்கும் உங்கள் எல்லாரிடம் அது வரவில்லை. இங்கே வெளியே, நாம் எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, நாம் வெளியே வருகிறோம், இங்கே நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், நான்-நான் ஆங்கிலம் பேசுகிறவன், நான் அதை முதலில் கொண்டிருந்த விதத்திலேயே, ஆங்கி லத்தில் பேசப் போகிறேன் (புரிகிறதா?) அப்பொழுது நீங்கள் அதை சுவிட்சர்லாந்தில் பேசப்படும் மொழியில் புரிந்து கொள்கிறீர்கள்” என்றேன். “இல்லை, இல்லை. இல்லை, இல்லை.” அவர், “இல்லை, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்கள் ஐரோப்பிய (மொழியில்) பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்றார். நான், "அப்போது அது அவ்வாறு இருந்திருக்கு மானால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்தும், பரிசுத்த ஆவியானவரின் வருகையைக் குறித்தும் நான் அவரிடம் கூறிக்கொண்டிருப்பது என்ன” என்றேன். புரிகி றதா? நான், “ஜீன் அவர்கள் உம்மிடம் ஜெர்மன் மொழியில் பேசிக் கொண்டிருக்க, ராய் அவர்கள் உம்மிடம் பிரெஞ்சு மொழியில் பேசிக் கொண்டிருக்க நான்-நான் உம்மிடம் சுவிட் சர்லாந்து மொழியில் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றேன். பாருங்கள்? மேலும் அவர் சொன்னார்... நான், “அப்படி யானால் ஒரு.....என்றேன். அவர், "இப்பொழுது-இப்பொழுது, நீர்-நீர் அதற்கு மிக அருகில் இருக்கிறீர்” என்றார். நான், "அதற்கு மிக அருகிலா? அதைத்தான் வேத வாக்கியம் கூறுகிறது. நாம் பிறந்த இடத்திலுள்ள நம்முடைய ஜென்ம பாஷையில் நாம் ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறோமே” என்றேன். புரிகிறதா? அவர், "ஓ" என்றார். நடுவர்களும்.... நான் அதைக் கண்டிருந்தேன். நான் இதுவரையிலும் அது ஒவ்வொன் றையுமே கரும்பலகையில் எழுதி வைத்திருந்தேன், அது உங்களுக்குத் தெரியும். எனவே நான், “நாம் இதை முடித்துக் கொள்வோம்” என்றேன். மேலும் அவர்-அவர் சொன்னார்... மேலும்-மேலும் நான், “அப்போது அவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தனர், ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்து கொண்டனர். முதற்கண் அதை நான் புரிந்து கொண்டேனே. அவர்கள் தங்கள் பாஷையைப் புரிந்து கொள்ள வேண்டி யிருந்தது. பாரும்? அவர்கள் புரிந்து கோள்ளாத ஒரே நேரம் பாபேலில் தான் இருந்தது. பெந்தெகோஸ்தேவிலே, ஒவ் வொரு மனிதனும் பேசினதை அவர்கள் புரிந்து கொண் டனரே” என்றேன். 24. அது... சுவிசேஷமானது உலகமெங்கும் போயாக வேண்டும், அது எருசலேமில் தொடங்கி, அந்நேரத்தில் முழு உலகத்திலும் அது போனது, சரியாக அங்கேயே உலகம் அறிந்து கொண்டது. பாருங்கள்? அது அவ்விதமாக வர வேண்டியிருந்தது, ஏனென்றால் (பாருங்கள்?), வானத்தின் கீழுள்ள எல்லா தேசத்தாரும், பக்தியுள்ள தேசத்தார்கள் அங்கே கூடியிருந்தனர்; அது பெந்தெகோஸ்தேவாக இருந் தது. புரிகிறதா? அவன் முழு உலகத்திலும் வந்து விட்டான். ஆனால் எருசலேம் தொடங்கி, உலகமெங்கும் போகுதல். புரிகிறதா? எனவே அது கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழு தலைக் குறித்த பேச்சிலே சாட்சிபகரப்பட வேண்டியதா யிருந்தது. எனவே அது சரியாக அங்கேயே உலகம் முழு வதும் போய் விட்டது. புரிகிறதா? இங்கேயிருந்த சுமந்து செல்பவர்களாகிய இவர்கள், இங்கேயிருந்த தொழுதுகொள் பவர்களாகிய இந்த ஜனங்கள், தங்களுடைய தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள். அதற்குப் பிறகு ஒரு சில நாட்களில், அந்த எத்தியோப்பியன் அங்கே போய்க் கொண்டிருந்தது போல, உங்களுக்குத் தெரியும், பிலிப்பு சமாரியாவுக்குப் போயிருந் தான், அந்த எத்தியோப்பிய மந்திரியோ (eunuch) ஆப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போகும் தன்னுடைய பாதையில் இருந் தான். அப்போது பரிசுத்த ஆவியானவர் அந்தப் பெரிய கூட்டத்திலிருந்து பிலிப்புவை அழைத்து, அவனை வனாந் திரத்தில் நிற்கும்படி செய்தார். அவன் ஏசாயா புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். இவனோ, "நீர் என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான். அதற்கு அவன், "ஏதோவொருவன் எனக்குப் போதிக் காவிட்டால், எப்படி எனக்குத் தெரியும்?” என்றான். அவன் வாசித்துக்கொண்டே, "இது யார்? தீர்க்கதரிசி யாரைக் குறித் துப் பேசிக் கொண்டிருக்கிறான்? தம்மைக்குறித்தா அல்லது என்று கேட்டான். அவன் பணிந்து கொள்ளும்படி அங்கே பெந்தெகோஸ்தேவுக்கு வந்திருந்தான். புரிகிறதா? எனவே அவன் சரியாக அங்கேயே இயேசுவின் நாமத்தில் ஞானஸ் நானம் பெற்றுவிட்டு, அவன் களிகூர்ந்துகொண்டே எத்தி யோப்பியாவுக்குப் போனான், அப்போது அவன் செய்தியை எத்தியோப்பியாவுக்கு எடுத்துக்கொண்டு சென்றான். அங்கே தான் அது போகும்படிக்கு தேவைப்பட்டது. இப்பொழுது, இங்கே... வருகிறது. இங்கே-இங்கே அது இருந்தது. புரிகிறதா? 25. நான், "இப்பொழுது..” என்றேன். எனவே நான், "ஐயா, நீர் பாரும், எல்லாரும் புரிந்து கொள்ளும் பாஷை களில் தான் அவர்கள் அவர்கள் பேசினார்கள் என்று நடுவர் கள் கூட ஏற்கனவே அங்கே (கரும்பலகையில்) எழுதி விட்டார்கள். அங்கே ஒரு வார்த்தையும் அடக்கி வைக்கப்பட வில்லை. பாரும்? எனவே உம்முடைய மாதிரியான பெந்தெ கோஸ்தேயானது ஏற்கனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் பட்டாயிற்று (புரிகிறதா?), ஏனென்றால் உம்முடைய மாதிரி யான பெந்தெகோஸ்தேவை பாபேலில் தான் பொருத்த வேண்டியதாய் இருக்கும், ஏனென்றால் அதை அப்போஸ்தலர் 2 மற்றும் 4ம் அதிகாரங்களில் உம்மால் அதைப் பொருத்த முடியாது. பாரும்? ஏனென்றால் அவரவர் தங்கள் பிறந்த இடத்திலுள்ள ஜென்ம பாஷையில் பேசுவதை அவர்கள் கேட்டனர், பாபேலிலோ யாருக்கும் எதுவும் புரியவில்லை. எனவே நீர் பாரும், உம்முடைய மாதிரியான பெந்தெ கோஸ்தேயானது ஏற்கனவே ஆதியாகமத்திலுள்ள பாபேலில் இருந்த பழையதுதான், அது மறுபடியும் (வந்துள்ளது). பாரும்? எனவே நீர் இன்னும் இங்கே பெந்தெகோஸ்தேயில் இல்லை” என்றேன். மேலும் நான், “ஆனால் நாம் அப்படியே இதை சற்று கூடுதலாக தொடரலாம். பாரும்? ஏனென்றால் அது ஏற்கனவே அங்கு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (பாரும்?). எனவே நீர் வேதாகமத்தில் எங்கு போனாலும், அது ஆதியில் இருந்தது போன்றே திரும்பி வர வேண்டியிருக் கிறது. தேவன் எல்லையற்றவர், அவரால் மாற முடியாது” என்றேன். 26. அவர், "நல்லது, அவர்கள்.." என்றார். அதன்பிறகு அவர் அதில் மீதமுள்ளவைகளைக் கொண்டு துவங்கினார். அவர், "இப்பொழுது, என்றாலும், சகோதரன் பிரன்ஹாமே, இந்த மனிதர்கள் மெதோடிஸ்டு அல்லது பாப்டிஸ்டு போல் இல்லாத இங்கேயுள்ளவைகளிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீர் ஒப்புக்கொள்வீர்” என்றார். பாருங்கள், அந்த... என்னுடைய பாப்டிஸ்டுகளை நோக்கி அதை அவர் எறிந்து கொண்டிருந்தார். பாருங்கள்? "அவர்கள்...அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, ஏவுதலின் கீழே பேசிக் கொண்டிருந்தார்கள்” என்றார். நான், "ஆம், ஐயா. நான் அதை ஒப்புக்கொள்வேன்” என்றேன். எனவே அவர்கள் அந்த ஒன்றைக் குறித்துக் கொண்டனர். “அவர்கள் அவர்கள் ஏவுதலின் கீழே பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும், அவர்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்றும் நான் ஒப்புக்கொள்வேன். நான் பிரசங்கம் பண்ணுகிற ஒவ்வொரு முறையும், நான் அதே விதமாகவே பிரசங்கிக்கிறேன், நீரும் அவ்வாறு இல்லையா? ஏவுதலைக்கொண்டு ஆங்கிலத்தின் கீழாக, அது உமக்குத் தெரியும்” என்றேன். அது அதைத் தீர்த்து வைக்கிறது ? - அது என்னை ற்குள் வைக்கிறது. நான், “நான் பிரசங்கம் பண்ணுகிற அல்லது தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஒவ்வொரு முறையும், அது அறியப்படாத பாஷைகளில் அல்ல. வியாக் கியானம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், அது நாகரீகம் இல்லாத காட்டுமிராண்டியைப் போன்றவரே அல்லாமல் வேறு யாருமல்ல என்று பவுல் கூறுகிறான். அது பக்திவிருத்திக் காகவும் மற்றவைகளுக்காகவும் தான் இருந்தாக வேண்டும். பாரும்?” என்றேன். எனவே அதிலிருந்து மீளமுடியாதபடி அது அவரை தோற்கடித்தது. பாருங்கள்? 27. நான் சொன்னேன்... நல்லது, அவர் சொன்னார்.. மேலும் நான், “நல்லது, அவை எல்லாமே ஏவுதலின் கீழாகத் தான் இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இப்பொ ழுது-இப்பொழுது, இவ்விதமாக, இப்பொழுது அவர்களில் சிலர், நாம்.....இருந்தது போன்று. அப்படியானால் கலிலேய ருடன் கலிலேயப் பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்களே, அவர்கள் ஏவுதலின் கீழ் தானே இருந்தார்கள், அப்படி அவர்கள் இல்லையா? பாரும்? நாங்களெல்லாரும் ஆங்கில மொழி பேசுகிறவர்களாக இருப்பது போன்று...” என்றேன். அவர், “அங்கே அவர்களில் யாரும் கலி... அல்லவே" என்றார். நான், "அது கலிலேயா நாட்டில் இருந்தது, பேசிக் கொண்டிருந்த எல்லாருமே கலிலேயர்கள் தான். அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிலும் கலிலேயர்கள் இருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் கலி லேயா நாட்டில் இருந்தார்கள். அது அந்த தேசிய மொழியாகஇருந்தது. அதன்பிறகு இந்த மனிதன் வெளியே வருகிறான், அவன் கலிலேயர்களிடம் அவர்களுடைய சொந்த பாஷை யில் பேசினான், அவன் கலிலேயனாக இருந்தான், நான் ஆங்கிலம் பேசுகிறவனாக இருந்து, ஆங்கிலம் பேசுகிறவர் களிடம் ஆங்கில மொழியில் பேசுவது போன்று அப்படியே. பாரும்? மேலும் அவன் அதைக் கொண்டிருக்கவில்லை” என்றேன். புரிகிறதா? நல்லது, அவர், "அது ஒருவன் மேல் விழுந்து பிறகு மற்றவன் மேல் விழுந்திருக்கலாம். அவைகள் அப்படியே பகிர்ந்தளிக்கப்பட்டன (divided up). ஒருக்கால் இங்கேயுள்ள இந்த ஒருவன் வந்து சற்றுநேரம் அவர்களிடம் பேசியிருப் பான்” என்றார். நான், "அப்படியானால் அந்த ஏழை கலிலேயர் களுக்குப் பிறகு, அதன்பிறகு அவர்களுக்கு எதுவுமே கேட்க வில்லை. அப்படியானால் அவன் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவன் ஆவியி னால் ஏவப்பட்டிருக்க மாட்டான். அதே காரியம் தான்” என்றேன். பாருங்கள், அப்போது நிற்க எந்த இடமும் இல்லாமற்போயிற்று, உங்களுக்குத் தெரியும். நாங்கள் வேதவாக்கியங்களை சரியாக நெருக்கமாக ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு நாங்கள் அவ்விதமாக தொடர்ந்து சென்றோம், அவ்விதமாகத் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தோம். பாருங்கள்? அது முதலில் அந்த அசலான காரியத்திற்கு திரும்பி வந்தாக வேண்டியிருக்கும். பாருங்கள்? எனவே நீங்கள் பாருங்கள், அது... அங்கே... அது- அது-அது ஒரு அறியப்படாத பாஷையில் பேசிக் கொண்டிருக்கவில்லை; அது ஏவுதலின் கீழே பேசிக் கொண்டிருப்பதாகும். புரிகிறதா? இந்தக் காலையில் இங்கே உங்கள் எல்லாருடைய மத்தியிலும் நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வது போன்று, நான் அவ்விதம் பெற்றுக்கொள் வேன் என்றால், நான் ஏவுதலின் கீழ் இருந்துகொண்டு, என்னிடம் வந்திருக்கிற பரிசுத்த ஆவியின் உயிர்த்தெழு தலைக் குறித்து ஏவுதலின் கீழாக உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். 28. இப்பொழுது, பாருங்கள், அந்நிய பாஷைகள் என்பது பரிசுத்த ஆவியல்ல. புரிகிறதா? அப்போது அவர், "அப்படியானால் அந்நிய பாஷைகளில் பேசுவதில் உமக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். நான், "நிச்சயமாக, எனக்கு அதில் நம்பிக்கை உண்டு. அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் நம்புகிறேன்” என் றேன். மேலும் நான், "வேதாகமத்தில் பதிவுசெய்து வைக்கப் பட்டுள்ள விதத்தின்படி வரங்களில் வரங்களிலேயே மிகச்சிறிய வரம் அதுதான், ஏனென்றால் அது கடைசி வரமாக உள்ளது” என்றேன். புரிகிறதா? நான், “ஒரு மனிதன் அந்நிய பாஷைகளில் பேசலாம், ஆனால் அவன்-அவன் அந்நிய பாஷைகளில் பேசுவதற்கு முன்பாக, முதலில் அவன் பரிசுத்த ஆவியைக் கொண்ருந்தாக வேண்டும். பரிசுத்த ஆவியை அவன் கொண்டிருக்கவில்லை என்றால், அவன் ஒரு நடிப்பவனாகத்தான் இருக்கிறான். அப்படியானால் நீர் சொன்னபடியே, மனிதர்களுடைய பாஷைகளும், தூதர்களு டைய பாஷைளுமாகிய அந்நிய பாஷைகளில் அவனால் பேச முடிந்தும், அவன் இன்னும் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்காமல் இருக்கலாம். ஏனென்றால் பவுல், 'நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்கள் பாஷைகளையும் பேசி னாலும் (என்னால் பேச முடிந்தாலும்), அன்பு எனக்கிரா விட்டால், நான் ஒன்றுமில்லை. நான் சகல அறிவையும் அறிந்து, வேதவாக்கியங்களை முற்றிலும் சரியாக என்னால் வியாக்கியானிக்க முடிந்தாலும், இந்த ஞானஸ்நானம் இல்லாமல், நான் ஒன்றுமில் ஒன்றுமில்லை. எனக்கு உண்டா னவைகளை நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தை பலியாக சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக விசுவாசமுள்ளவனாயிருந்தா லும், நான் ஒன்றுமில்லை' என்று கூறுகிறான். நான் இன்னும் துவங்கக் கூட இல்லை. புரிகிறதா? இப்பொழுது, இந்தச் சகல விசுவாசமும் எனக்குண்டு” என்றேன். நான், “இப்பொழுது, உமக்குத் தெரியுமே, அந்நேரத்தில் அங்கே மேலேயிருந்த, அந்த லூத்தரன் மதகுருவாகிய Dr. ஹெக்ரெ அவர்களைப் போன்று அது பதிலளிக்கிறது, அது உமக்குத் தெரியும். நான் அவரிடம் கூறினேன்.. என்றேன். எங்களுக்கு உண்டாயிருந்த விவாதம் உங்களுக்கு ஞாபக மிருக்கும், உங்களுக்கு அது தெரியும், அங்கே... ஏறக்குறைய... வியாதியஸ்தருக்காக ஜெபித்த, அந்த சூனியக்காரியைக் குறித்து அவர் என்னிடம் கூறிக் கொண்டிருந்தார், உங்களுக் குத் தெரியும், அவர்கள் சுகமடைந்தார்கள், மேலும் தேவனால் சுகப்படுத்த முடியாதிருந்தது என்று கூறினார். அந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் கருதுகிறீர்கள்... பாருங்கள்? நான், "நிச்சயமாக” என்றேன். 29. இந்த மனிதர்களில் அநேகரை நாங்கள் கொண் டிருக்கிறோம், அவர்கள் மேலே வந்து, "சகோதரனே, என்னு டைய கரம் சுகமாகி விட்டது. வியூ. அதை உணருகிறீர்களா? அவர்கள் அதைச் செய்யவில்லை, ஆனால் ஜனங்கள் அப்படியே அதேவிதமாக சுகத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள், ஏனென்றால் அது விசுவாசத்தின் அடிப்படையின் பேரில் உள்ளது, அந்த மனிதன் அவன் தேவனை அவ்விதமாகவே அணுகுகிறான் என்று நினைத்துக் கொள்கிறான். அவர்கள் சரியாக அங்கிருந்து வெளியே வந்து, அந்நிய பாஷைகளில் பேசின போது, (பாருங்கள்?) இந்த ஜனங்களில் அநேகர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? அது பரிசுத்த ஆவி தான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அவர்கள் அதைப் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு அது எந்த சான்றும் கிடையாது. அவர்களுடைய ஜீவியம் தான் அதை நிரூபித்துக் காட்டும்” என்கிறார்கள். அவர்களில் சிலர் அங்கிருந்து வெளியே வந்... என்னுடைய தரிசனத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் அந்நேரத்தில் மிஷவாகாவிற்குப் போன போது, அந்த ஜனங்கள் அங்கிருந்து வெளியே வந்து, அது உங்களுக்குத் தெரியும், அந்த வாலிப கறுப்பு மனிதன், "இதோ அவன் இருக்கிறான். இதோ அவன் இருக்கிறான்” என்று கூறின போது, அது எப்படியிருந்தது என்பதைக் குறித்து நீங்கள் என்னுடைய ஒலிநாடாக்களில் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், அது உங்களுக்குத் தெரியும். நல்லது, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது, அங்கே அவர்களிடம் ஒரு மனிதன் இருந்தான், அவன் அந்நிய பாஷைகளில் பேச, மற்றவன் வியாக்கியானம் அளித்துக் கொண்டிருந்தான். நான் அதை என்னுடைய ஜீவியத்தில் அதற்கு முன்பு கேட்டதே யில்லை. பாருங்கள்? மேலும் இப்பொழுது, நான் (அதை) உங்களிடம் கூறினேன் என்றால், நீங்கள் என்னை நிறுத்தி விடுவீர்கள். பாருங்கள்? 30. எனவே பிறகு... ஆனால் இந்த மனிதர் அந்த விவாதத்தில் தோற்றுப்போனார் என்று உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக இன்னும் ஏராளமான காரியங்கள் உண்டு, ஆனால் அங்கே (நடந்த காரியங்களைக்) குறித்து நான் என்ன பேசிக் கொண்டிருந்தேன் என்பதை நீங்கள் காண்கிறீர்கள். பாருங் கள்? சரியாக ஆதிக்குத் திரும்பி வாருங்கள் (புரிகிறதா?), சரியாக ஆதிக்குத் திரும்புதல். (கூட்டத்திலிருந்த சகோதரன், “அந்நிய பாஷைகளில் பேசிக்கொண்டு, அந்த ஞானஸ்நானத்தை தாங்கள் கொண் டிருப்பதாக உணர்ந்தும், ஆனால் அவர்கள்-அவர்கள் உண்மையில் அதைக் கொண்டிருக்காமல் இந்த ஜனங்களில் அநேகர் இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் - ஆசிரியர்.) அதைப் பெற்றிருக்கவில்லை. (அவர்கள் அவ்வாறு அறிக்கை பண்ணினார்கள்..... ஆசிரியர்.] ஆமாம். [“அந்த” ஆசிரியர்.] அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. புரி கிறதா? உண்மையான பரிசுத்த ஆவி உள்ளே வரும்போது, அது கிறிஸ்துவின் ஜீவனாக இருக்கிறது (புரிகிறதா?), அது சாவுக்குரிய இந்த மனிதனுக்குள் ஜீவிக்கிறது. பாருங்கள்? இயேசு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட போது, அவர் அந்நிய பாஷைகளில் பேசிக்கொண்டிருந்தாரா என்பதைக் குறித்து அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்லவேயில்லை. இப்பொழுது, யோவான் ஸ்நானனைக் குறித்து என்ன? அவன் தன்னுடைய தாயின் கற்பப்பையில் இருந்து பிறப்ப தற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, அவன் பரிசுத்த ஆவி யைப் பெற்று விட்டான். அவன் எப்படி அந்நிய பாஷை களில் பேசினான். [செவிடர்களையும் ஊமையர்களையும் குறித்துஎன்ன?] ஆமாம். அவர்களால் பேசவோ அல்லது கேட்கவோ கூட முடியாதிருக்குமானால், அவர்களால் எப்படி அந்நிய பாஷைகளைக் கொண்டு பேச முடிந்திருக்கும்? எலிசபெத்தும் மரியாளும் தாங்கள்... போது, அவர்களைக் குறித்து என்ன? யோவானுடைய தாயாகிய எலிசபெத் பரிசுத்த ஆவியால் நிறைந்து, தீர்க்கதரிசிசனம் உரைத்து, பேசினபோது, அந்நிய பாஷைகளில் பேசவில்லையே. புரிகிறதா? 31. எனவே அவர்கள்-அவர்கள் தொடர்ந்து விடாப்பிடி யாய் திடமாய் நிற்கும் திறனை கொண்டிருக்கவில்லை.... அவர்களுடைய முக்கிய தலைவர்கள் சிலரிடம் நான் பேசின போதிலும், அறிவுத்திறம் வாய்ந்த ஜனங்களைக் கொண்ட அந்த முக்கிய குழுவானது அதை ஒப்புக்கொள்ளும் (நீங்கள் பாருங்கள்?), ஆனால் அவர்கள்... ஆனால் அவை எல்லாம் என்னவென்று அவர்கள் சொன்னார்கள் என்றால்....இப்பொ ழுது, அது சபையினுடைய ஒரு உபதேசமாய் இருக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? அதுதான்... நீங்கள் அதைக் குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? நல்லது, அங்கே தான் காரியம். புரிகிறதா? இப்பொழுது, என்... இப்பொழுது அவர்கள் அதை மாற்றிப்போட முயற்சித்தால், அவர்கள் ஸ்தாபனத் திலிருந்து இவர்களை வெளியேற்றி விடுவார்கள். புரிகிறதா? நல்லது, அது சரியாக அவ்வாறே உள்ளது... நான் சுயாதீனமாக இருக்கலாம். நான் எந்த ஸ்தாபனத் தையும் கொண்டிருக்க வேண்டியதில்லை. பாருங்கள்? நான் அடிமையாக இல்லாமல், சுயாதீனமாகப் பிறந்த குடிமகன், எனக்குப் பேச உருமை உண்டு, நான் என்ன கூற விரும்பி னாலும் அதைப் பேச எனக்கு சுதந்திரம் உண்டு. நான் ஊழியக்காரனாக நியமிக்கப்பட்டவன், எனவே விவாகம் செய்து வைத்தல், அடக்கம் பண்ணுதல், அல்லது ஞானஸ் நானம் கொடுத்தல், அல்லது சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுதலிலிருந்து அவர்களால் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. உங்களுக்குப் புரிகிறதா? நாம் ஜனநாயகத்தைக் (கொண்டிருக்கும்) காலம் வரையில், எந்த ஸ்தாபனத்தையும் சேர வேண்டியதில்லை. புரிகிறதா? மேலும் - மேலும் எனவே இப்பொழுது நாம்-நாம்-நாம் ஒரு... ஆக இதைக் கூறுகிறோம். அதில் அதில்....இப்பொழுது உங்களுக்கு விளங்குகிறதா? முற்றிலுமாக உங்களுக்கு முழு நிச்சயம் கிடைத்து விட்டதா? (சகோதரன், "ஓ, நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே முழு நிச்சயத்தோடிருந்தோம்" என்று கூறுகிறார் ஆசிரியர்.] ஆமாம், அது ஒரு... நான்...... மிக, மிக நன்றாகத் தோன்றுகிற சில காரியங்கள் அங்கே இருக்கலாம் என்று நினைக்கிறேன், ஆனால் அது அப்படியே...... முற்றிலுமாக....